மீண்டும் மிடுக்காகத் தொடங்கும் அருணோதயக்கல்லூரியின் உதைபந்தாட்டம்.

எமது கல்லூரிப் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள்,புலம்பெயர்ந்த பழையமாணவர்களின் வேணடுகோளிற்கிணங்கவும் அவர்களின் ஊக்குவிப்பிற்கேற்பவும் நான்கு வருட இடைவெளியின் பின் அதிபர், விளையாட்டுத்துறை முதல்வரின் முயற்சியினால் 15வயதின் கீழ் உதைபந்தாட்ட அணி தொடங்கப்பட்டு கோட்ட, வலய , மாவட்ட மட்டப்போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று மாகாணமட்டப்போட்டியிலும் இறுதிவரை வெற்றிகளைப்பெற்று இறுதிப் போட்டியில் 1.0 என்ற கோல்கணக்கில் புனித ஹென்றியரசர் கல்லூரியிடம் தோல்வி கண்டு 2ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. பொறுப்பாசிரியராக சுகுணேந்திரன் அவர்களும் பயிற்றுனர்களாக பிரதீபன் அவர்களும் ரஜிதன் அவர்களும் கடமையாற்றி இவ் வெற்றிகளுக்கு அரும் பங்காற்றினர். பல வருடங்களாக பின்னடைவுகண்டு வந்த அருணோதயாவின் உதைபந்தாட்டம் மீண்டும் தொடங்கும் மிடுக்காக எழுச்சி கண்டுள்ளது. இவ் உதைபந்தாட்ட அணி எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள தேசிய மட்டப்போட்டியிலும் பங்கு பற்றி வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள். அருணோதயாவின் உதைபந்தாட்டம் வளர்ச்சி பெற உதவியவர்களுக்கும் சீருடை,உதைபந்துகளை பெற்றுத்தந்த புலம்பெயர்ந்த பழைய மாணவர்களுக்கும் பயிற்சியளித்த பழைய மாணவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உதைபந்தாட்ட வளர்ச்சிக்காகவும் விளையாட்டுவீரர்களுக்கு போசாக்குணவை வழங்குவதற்காகவும் நிதியுதவியை பழையமாணவரிடம் எதிர்பார்க்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *