AUSTRALIA

அருணோதயாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் (அவுஸ்திரேலியா) அனுசரணையுடன் நடாத்தப்படும் அருணோதயாவின் இன்னிசைமாலை 2013.

அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலியக் கிளை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பழைய மாணவர் சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர் திரு.செ.சிறிக்காந்தன் அவர்களின் முயற்சியினால் அவுஸ்திரேலியா வாழ் பழைய மாணவர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் அளவை உறவுகள் என அனைவரும் அணிதிரட்டப்பட்டு தற்போது பழைய மாணவர் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு புதிதாக நிர்வாக சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


நிர்வாக சபையின் விபரம்

தலைவர் திரு.எம்.செந்தில்வாசன்
செயலாளர் திருமதி.கே.விமலா
பொருளாளர் திரு.ரி.செந்தூரன்
உபதலைவர் திரு.என்.கனகசபேசன்


சங்கத்தின் ஆலோசகராக கல்லூரியை போர் சூழ்ந்த இக்கட்டான வேளைகளில் காவித்திரிந்து காப்பாற்றிய அதிபர் திரு.கி.மகேந்திரராஜா செயற்படுகின்றார். கல்லூரி வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்த தேவையான அனைத்து உதவிகளையும் தம்மால் இயன்றளவு வழங்க முயற்சிப்பதாகவும் முதற்கட்டமாக நிதி திரட்டும் நோக்கில் இந்திய திரைஇசைக் கலைஞர்களை எதிர்வரும் வருடம் முற்பகுதியில் அழைத்து இசை நிகழ்வொன்றை நடாத்தவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தி்ன் தலைவர் திரு.செந்தில்வாசன் தெரிவித்தார். அதேவேளை சங்கத்தை வலுப்படுத்தும் வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள பழைய மாணவர்கள் அனைவரும் தம்மோடு இணைந்து செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். தமது சங்கத்தின் அடுத்த ஒன்றுகூடல் எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் புதிய அங்கத்தவர்களையும் கலந்து கொண்டு இணையுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு     :  msenthilvasan@cityofsydney.nsw.gov.au


அருணோதயம் இன்னிசை நிகழ்வு 2013

அருணோதயாக் கல்லூரியின் வளர்ச்சிக்காக வருடம்தோறும் நடாத்தப்படும் அருணோதயாவின் இன்னிசை நிகழ்வு இம் முறையும் வெகுசிறப்பாக தென்னிந்தியத் திரைப்படப் பாடகர் மதுபாலகிருஸ்ணண் மற்றும் சுப்பர் சிங்கர்ஸ் யூன் 1 அவுஸ்திரேலியா சிட்னி நகரில் காத்திருங்கள் இசைமழையில் நனைய….