Category Archives: News

அருணோதயன் பேராசிரியர் செல்லத்துரை மகாலிங்கம் அன்னாரின் மறைவிற்கு அருணோதய அன்னையின் இதய அஞ்சலிகள்.

Published by:

பேராதனை பல்கலைக்கழக இயந்திரவியல் பீடத்தின் வாழ் நாள்பேராசிரியரும் அதிர்தல் என்ற கோட்பாட்டில் தனது பங்களிப்பிற்காக உலகப் பிரசித்தி பெற்றவரும் அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவருமான மகாலிங்கம் அவர்கள் 03.11.2015 இல் காலமானார். அவரது மறைவிற்கு அருணோதயக் கல்லூரிச்சமூகம் சார்பில் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

புலம்பெயர்வாழ் பழையமாணவர் சங்கங்களின் உதவியுடன் (06.11.2013) அருணோதயக்கல்லூரிக்கு 22 பரப்புக்காணி கொள்வனவு செய்யப்பட்டது

Published by:

கனடா, இலண்டன், பிரான்ஸ் பழைய மாணவர் சங்கங்களின் நிதியுதவியுடன் அருணோதயக் கல்லூரிக்கு கல்லூரியை எல்லையாகக் கொண்டதும் டச்சு வீதியை முகப்பாகக் கொண்டதுமான 22 பரப்புக்காணி அதிபர், பிரதிஅதிபர், பழைய மாணவர்களின் அளப்பரிய முயற்சியாலும், புலம்பெயர் நாடுகளிலுள்ள எமது பழைய மாணவர் சங்கங்களின் நிதியுதவியினாலும் இன்று கொள்வனவு &#por70;ெp#2991;்யப& #3021;பட்டது. இதற்காகப் பாடுபட்ட எல்லோருக்கும் அருணோதயக் கல்லூரிச் சமூகம் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

2016 தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டி

Published by:

கண்டி போகம்பரை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைமட்ட மெய்வல்லுநர் போட்டி 13.10.2016 – 17.10.2016 வரை நடைபெற்றதுஇதில் 17 வயதுப்பிரிவில்கேலூன்றிப்பாய்தலில் ரு.யதுசன் 3.60m உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும் ரு.சலக்சன்3.50m உயரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் .கஜவரன் 3.20m உயரம் பாய்ந்துவர்ணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டதோடு 21 வயதுப்பிரிவில் P.நிதுசன் 3.70m உயரம் பாய்ந்துவெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்அத்தோடு 19 வயதுப்பிரிவில்மு.நெப்தலியொய்சன் 4.61m உயரம் பாய்ந்து புதிய சாதனையை நிலைநாட்டியமைகுறிப்பிடத்தக்கதுஅத்தோடு அதே பிரிவில் .தனீஸ் 4.00 உயரம் பாய்ந்துவர்ணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பப்பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் -2016

Published by:

அருணோதயக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்கு 130 அடி நீளமுடைய இரு மாடிக் கட்டடித்திற்கான அடிக்கல் நாட்டு விழா 04.05.2016 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ளு.சந்திரராஜா அவர்களால்அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன. அடிக்கல் நாட்டுவிழாவில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், ஆகியோரும்  கலந்து  சிறப்பித்தனர். இக் கட்டடம்  அமைகின்ற காணிஅருணோதயக்கல்லூரி பழைய மாணவர் சங்கங்களால் கடந்த வருடம்  கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் அருணோதயக் கல்லூரி மாணவர்கள் சாதனை

Published by:

நடைபெற்று முடிந்த தேசிய மட்ட ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 2 இல் மதிவதனன் லட்சிகன் 4ம் இடத்தினையும் பிரிவு 1 இல் கம்சாயினி உதயகுமார் 2ம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கும் எமது மாகாணத்திற்கும் புகழ் சேர்த்துள்ளனர். இவர்களையும் ஊக்கமளித்த அதிபர் திரு.நா.கேதீஸ்வரன் அவர்களையும் இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு.இ.கிருஸ்ணதாஸ் அவர்களையும் பாடசாலைச் சமூகத்தினர் பாராட்டுகின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சையில் மீள்பரிசீலனையில் சித்தி

Published by:

அருணோதயக் கல்லூரி மாணவி சுவேந்திரன் அபிசா புலமைப்பரிசில் பரீட்சையில் மீள் பரிசீலனையில் சித்திபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை பாடசாலைச் சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றோம்

அருணோதயக்கல்லூரியின் இல்லமெய்வல்லுனர் திறனாய்வு-2016.02.02

Published by:

அருணோதயக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராகவலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.பொ.ரவிச்சந்திரன் அவர்களும்,  சிறப்பு விருந்தினராகதெல்லிப்பளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.ஈஸ்வரநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக அருணோதயன்திரு.எஸ்.செல்வநேசன் அவர்களும் கலந்து கொண்டனர். இல்லங்களின் நிலைகளில் சின்னத்தம்பி இல்லம்தொடர்ந்து 4வது தடவையாகவும் சம்பியனானது. 2ம் இடத்தினை கனகசபை இல்லமும் 3ம் இடத்தினை பொன்னையாஇல்லமும் 4ம் இடத்தினை அருணாசலம் இல்லமும் பெற்றுக் கொண்டன.

அருணோதயன் பேராசிரியர் செல்லத்துரை மகாலிங்கம் அன்னாரின் மறைவிற்கு அருணோதய அன்னையின் இதய அஞ்சலிகள்.

Published by:

பேராதனை பல்கலைக்கழக இயந்திரவியல் பீடத்தின் வாழ் நாள்பேராசிரியரும் அதிர்தல் என்ற கோட்பாட்டில் தனது பங்களிப்பிற்காக உலகப் பிரசித்தி பெற்றவரும் அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவருமான மகாலிங்கம் அவர்கள் 03.11.2015 இல் காலமானார். அவரது மறைவிற்கு அருணோதயக் கல்லூரிச்சமூகம் சார்பில் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.